வெள்ள நிவாரணம் வழங்க கோரி வரும் 30ம் தேதி காட்டுமன்னார்குடியில் ஆர்பாட்டம்,முற்றுகை போராட்டம்.

காட்டுமன்னார்கோவிலில் வருகிற 30-ந்தேதி கடையடைப்பு மற்றும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

image

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

காட்டுமன்னார்கோவிலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரமுகர்கள் அன்பரசன், தம்பியாபிள்ளை, மதிவாணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடையடைப்பு:
கூட்டத்தில், மழை வெள்ளத்தில் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள விளை நிலங்கள் மூழ்கி பயிர்கள் அனைத்தும் நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்திடக்கோரியும் வருகிற 30-ந்தேதி(புதன்கிழமை) குமராட்சி, காட்டுமன்னார்கோவிலில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் பா.ம.க. சார்பில் பூக்கடை கண்ணன், வேலு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜோதிமணி, சம்பந்தம், செல்வநாதன், குமார், காங்கிரஸ் கட்சி வாசுதேவன், செல்வம், ரெங்கநாதன், ம.தி.மு.க. செந்தில்குமார், செந்தில், பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார், பன்னீர்செல்வம், மணவாளன், வில்லியம், திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரகாஷ், மகாலிங்கம், ராஜராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.ஜி.ராமசந்திரன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி யாசர் அரபாத், முகமது ஹம்ஜா, விவசாய சங்க பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-http://lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: