தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 காலி பணியிடங்கள்; பதிவு செய்ய இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 375 பணிகள்
உள்ளன.

image

இது பற்றிய விவரம் வருமாறு:–
தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக டி.என்.இ.பி என்றழைக்கப்படும், இந்த துறையில் தற்போது உதவி பொறியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 375 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவற்றில் மின்னியல் பிரிவில் 300 இடங்களும், சிவில் பிரிவில் 50 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…
வயதுத் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 1–7–2015 அன்று 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 30 வயதிக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. பிரிவினர் விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் இல்லை. கல்வித்தகுதி:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொடர்பு, மெக்கானிக்கல், புரொடெக்சன், இண்டஸ்ட்ரியல், மேனுபக்சரிங், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி., விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமாக 250 ரூபாயும் பி.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.சி பிரிவினர் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். கட்டணத்தை கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கி மூலமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். எனவே முன்னதாகவே ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க கடைசி நாள் : 11–1–2016
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 13–1–2016தேர்வு நடைபெறும் நாள் : 30–1–2016
விண்ணப்பிக்கவும், இதுபற்றிய விரிவான விவரங்களை அறிந்துகொள்ளவும் http://www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-http://lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: