தலையில் அணிந்தால் மட்டுமே வாகனம் இயங்கும்; பள்ளி மாணவர்கள் புதிய ஹெல்மட் கண்டுபிடிப்பு. ்

தலையில் அணிந்தால் மட்டுமே இரு சக்கர வாகனம் இயங்கும் வகையில் ஒரு புதிய தலைக் கவசத்தை சென்னை பள்ளி மாண வர்கள் உருவாக்கியுள்ளனர்.

image

இரு சக்கர வாகன விபத்துகளில் தலைக்காயம் காரணமாக ஏற் படும் உயிரிழப்புகளே அதிகம் என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிந்த பின்னர் நீதிமன்றங்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. ஆனாலும் வாகன ஓட்டிகள் பலர் அதன் அவசி யத்தை உணராமல் தலைக்கவசம் அணியாமலும் அல்லது பெயருக்கு தலைக்கவசத்தை வாகனத்தில் வைத்துக்கொண்டும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கண்டுள்ளனர் சென்னை யைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள். இவர்கள் உருவாக்கியுள்ள தலைக் கவசத்தை தலையில் அணிந்தால் தான் வாகனம் ஸ்டார்ட் ஆகும். தலைக்கவசம் அணியாமல் வாக னத்தை ஸ்டார்ட் செய்ய முடியாது.
சென்னை பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் மேல் நிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் எம்.ஜெயக்குமார், எஸ்.ராம், 10-ம் வகுப்பு மாணவி ஜெ.பூஜா ஆகியோர் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கியுள்ள புதிய தலைக்கவசத்தில் சிறிய அளவில் ஒரு சென்சாரையும், வாகனத்தில் ஒரு ரிசீவரையும் பொருத்தியுள்ளனர். தலைக்கவசத் தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் தலையில் அணிந்தால் மட்டுமே வாகனத்தில் உள்ள ரிசீவருக்கு சமிக்ஞை அனுப்பும். அதன் பின்னர் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது அது ஸ்டார்ட் ஆகும். தலைக் கவசத்தில் உள்ள சென்சாரை, புளூ டூத் மூலம் மற்ற வாகனங்களை பகிர்வு செய்தும் இயக்க முடியும்.
மேலும், இரு சக்கர வாகனத் தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மற்றும் ரிசீவர் ஆகியவை வாக னங்களின் முகப்பு விளக்கு வெளிச் சத்தையும் கட்டுப்படுத்துமாறும் வடிவமைத்துள்ளனர்.
எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டதும் இந்த சென்சார் பொருத்தப்பட்ட வாகனத்தின் முகப்பு விளக்கின் ஒளி உமிழும் அளவு குறைந்துவிடும்.
“அதிக ஒளி உமிழும் முகப்பு விளக்குகளால் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் எதிரே வாகனங்கள் வரும் போது ஒளி உமிழும் அளவை கட்டுப்படுத்தினால் விபத்துகள் பெருமளவு குறையும் என்பதால் இப்படி வடிவமைத்துள்ளோம். இதன் விலை இப்போது இரண்டா யிரம் ரூபாய் ஆகிறது. இதை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் போது விலை பெரிதும் குறையும். இந்த தயாரிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இதை அனைத்து இருசக்கர வாகனங்களிலும் பொருத்தக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளோம்” என்றனர் புதிய தலைக் கவசத்தை வடிவமைத்த மாண வர்கள்.
விஐடி பல்கலைக்கழகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 1,400 மாணவர்கள் பங்கேற்ற தென்னிந்திய அளவிலான அறிவி யல் செயல்பாடு கண்காட்சியில் இந்த கண்டுபிடிப்பு முதலிடத்தை பெற்றது.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-
http://www.lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: