லால்பேட்டையில் தொடர்ந்துவரும் குழந்தைகள் கடத்தல் சம்பவம்; இன்றும் ஒருவன் பிடிபட்டான்

image

லால்பேட்டையில் சில தினங்களுக்குமுன் முபாரக் பள்ளி  மத்ஹப்பை  சார்ந்த மினா தெருவில் வசிக்கும் ஒரு குழந்தையை மத்ஹப்பை விட்டு வீடு திரும்பும்போது கல்வன் ஒருவன் குழந்தையிடம் “உனது தாய் உன்னை அழைத்துவர கூறினார்” என கூறி அந்த குழந்தையை கடத்தி சென்றபோது கங்கிருப்பு அருகே பிடிபட்டான். இது ஒருபரம் இருக்க இன்றும் சில கல்வர்கள் கைவைரிசையை காட்டியுள்ளனர். இன்று ஜும்அ தொழுகை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தெருவில்   யாரும் இருக்கமாட்டார்கள் என்ற சந்திரப்பத்தை பயன்படுத்திகொண்டு பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்த சிறுபிள்ளையை பைக்கில் வந்த இரண்டு நபர்கள் கடத்த முயர்ச்சித்தனர் ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்துகெண்டிருந்த அக்குழந்தையின் சகேதரன் அவர்களை பார்ந்து அந்த குழந்தையை தூக்காதவண்ணம் சத்தமிட்டு தடுத்துகொண்டிரந்தான். அந்த நேரத்தில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை வரிசையாக கடத்தியவர்கள் யார்..? முதல் கடத்தலுக்கும் தற்பொழுது நிகழ்ந்த கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
” குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், குழந்தைகளை தனியே கடைகளுக்கோ,உறவினர் வீடுகளுகளுக்கோ அனுப்பவேண்டாம் பெரியவர்களுடன் அனுப்புங்கள் என லால்பேட்டை எக்ஸ்குளுஸிவ் இணையத்தளம் சார்பாக அன்போடும் அக்கரையோடும் கேட்டுக்கெள்கிறோம்”்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: