புதிய தலைமுறை தொலைகாட்சி கட்சி சார்பானது..? சர்வே கருத்து கணிப்பு.

image

எஸ்.ஆர்.எம் பல்கலை நிறுவனம் மாபெரும் வருமானத்தை தரும் பெரு உற்பத்தியாக மாறிய போது பாரிவேந்தர் பச்சமுத்து மகிழ்ச்சியடைந்தாலும் ஒரு வருத்தம் அவருக்கு இருக்கவே செய்தது. எவர் வீட்டு பணமோ இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு என்று பெரும் கட்சிகள் மட்டுமல்ல, முகவரியே இல்லாத அனாமதேயக் கட்சிகள் கூட அன்னாரை சந்தித்து மாமுல் வாங்கி வந்தனர். தனது தொழிலுக்கு இது பாதுகாப்புதான் என்றாலும் இதற்கு முடிவே இல்லையா என்று யோசித்த வேந்தருக்கு உதித்த யோசனைதான் கட்சி ஆரம்பிப்பது! அப்படி “இந்திய ஜனநாயகக் கட்சி” ஆரம்பித்து கூடவே புதிய தலைமுறை பத்திரிகை, தொலைக்காட்சி, புது யுகம் என்று அம்பானி போல ஆட்சியை விரிவுபடுத்தினார் பாரிவேந்தர். எழுத்தாளர்களுக்கு விருது, திரை நட்சத்திரங்களுக்கு பாராட்டு – கவனிப்பு என்று தொழில் சுத்தமாக போன பிறகு தனது கல்வித் தொழிலை இந்திய அளவில் கொண்டு போக பா.ஜ.கவுடன் நெருங்கினார். மோடி கூட்டத்திற்கு மட்டுமல்ல, தேர்தலுக்கே ஸ்பான்சர் அளித்தார். அதில் முக்கியமானது தொலைக்காட்சி மூலம் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்களான அற்பங்கள் பலரை விவாத வித்வான்களாக்கி அரசியல் என்றாலே அது பா.ஜ.க பார்ப்பது போலத்தான் என்று மாற்றினார்கள். அதே போல அ.தி.மு.க – ஜெயலலிதாவை அண்டிப் பிழைக்கும் தமிழ் ஊடக வழக்கப்படி மழை வெள்ளத்தின் போது கூட அரசை கண்டிக்காமல் மயிலிறகு வருடலை வாசித்தார்கள். புதிய தலைமுறை மாலனோ ஜெயா கட்சி கூட்டத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் போல அம்மாவுக்கு தாளம் போட்டார். இருப்பினும் பொதுவில் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றாலே நடுநிலைமை என்றொரு மூட நம்பிக்கை இங்கே நிலவுகிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதற்கு இந்தக் கேள்வியை முன்வைத்தோம். மொத்தம் 29 சதம் மக்கள் அதை ஏதோ ஒரு கட்சி சார்பு என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். 18 சதமானோர் எந்தக கட்சி சார்பு என்று தெரியாது என்றும், 52,8 % பேர்கள் கட்சி சார்பற்றது என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆக சரிபாதிப்பேர்கள் மட்டும் புதிய தலைமுறையை கட்சி சார்பற்றது என்று குறிப்பிடுவது அந்த தொலைக்காட்சியின் பெயர் பெரிதும் ரிப்பேராகி வருவதையே காட்டுகிறது. கட்சி சார்பு என்று குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதம் பேர்கள் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே என்றும், 8%பேர்கள் அ.தி.மு.க என்றும், 4.5 % பேர்கள் பா.ஜ.க என்றும் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது.பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை என்பது இந்த கேள்வியில் தெரிய வருகிறது. இதே கேள்வி மட்டும் புதிய தலைமுறை ஆரம்பித்த முதல் வருடத்தில் கேட்டிருந்தால் கட்சி சார்பற்றது என்பதே அதிகம் வந்திருக்கும். தற்போது அது மாறி வருகிறது. மெரினாவில் இரண்டு இளைஞர்கள் தங்களை எஸ்.ஆர்.எம் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கேள்விக்கு எங்களிடமே கேட்கிறீர்களே என்று சிரித்தனர். எது சரி என்று கருதுகிறீர்களோ அதை டிக் செய்யுங்கள் என்றதும் சிரித்துக் கொண்டே ஐ.ஜே.கேவிற்கு போட்டனர். கடைசிக் கேள்விக்கும் நம்ப முடியாது என்ற பதிலை அளித்தனர். ஒருவர் தன்னை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஏறக்குறைய இதே பதில்களை அளித்தார். ஆக அங்கே வேலைபார்ப்பவர்களுக்கே புதிய தலைமுறை நடுநிலைமையானதில்லை என்பதை பொதுவெளியில் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.

<<>>
♦புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?

அ.தி.மு.க- 8.0%
பா.ஜ.க- 4.6%
தி.மு.க- 3.7%
பச்சமுத்துவின் ஐ.ஜே.கே- 12.7%
கட்சி சார்பற்றது- 52.8%
தெரியாது- 18.2%

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: