SDPI கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்து போட்டி; முதற்கட்டமாக 10 வேட்பாளர்கள் அறிவிப்பு.

image

SDPI கட்சி 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு களம் காணும் கட்சியின் மாநில தலைவர் KKSM.தெஹலான் பாகவி அறிக்கை

SDPI கட்சியின் சிறப்பு மநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் KKSM.தெஹலான் பாகவி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மநில துணை தலைவர்கள் S.M.ரபீக் அஹமது, நெல்லை முபாரக்,அம்ஜத் பஷா,மநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமீர் ஹம்சா,,G.அப்துல் சத்தார்,I.உஸ்மான் கான்,T.ரத்தினம், மற்றும் மநில பொருளாளர் முஹைதீன் ஆகியோர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் ,மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆகிய அனைவரும் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏற்கனவே SDPI கட்சியின் மாநில செயற்குழு 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்ததை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது வேட்பாளர்கள் யார் என்பது பற்றி விரிவாக விவாதிக்கப் பட்டது. இறுதியில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் அத் தொகுதிகளுக்கான 10 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர்.
.
போட்டியிடும் தொகுதிகள்:
♦பாளையங்கோட்டை
♦கடையநல்லூர்
♦மதுரை மத்தி
♦திருவாடனை
♦முதுகுளத்தூர்
♦துறைமுகம்
♦ராயபுரம்
♦தாம்பரம்
♦திரு.வி.க.நகர்(தனி)
♦சிதம்பரம்
♦வேலூர்
♦ஓசூர்
♦அறந்தாங்கி
♦பழனி
♦கோவை தெற்கு
♦தொண்டாமுத்தூர்
♦கிணத்துகடவு
♦பட்டுகோட்டை
♦பாபநாசம்
♦ஈரோடு கிழக்கு
♦சேலம் வடக்கு
♦கம்பம்
♦மானாமதுரை
♦சங்கராபுரம்
♦திருப்பூர் தெற்கு
.
முதற்கட்டமாக அறிவிக்கபட்டுள்ள 10 வேட்பாளர்கள் பட்டியல்:
1. துறைமுகம் :S.அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர்
2. திரு.வி.க.நகர் (தனி) :புஸ்பராஜ் ,வட சென்னை மவட்ட செயலாளர்
3. கம்பம் :S.M.ரபீக் அஹமத் ,மாநில துணை தலைவர்
4. வேலூர்: ஹாஜி ஷேக் மீரான் ,வேலூர் மவட்ட வர்த்தகர் அணி தலைவர்
5. திருவாடனை :ஷரீப் சேட் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
6. மதுரை: மத்திய நஜ்மா மாநில மகளிரணி தலைவர்.
7. ராயபுரம் :கோல்டு ரபீக் ,ராயபுரம் தொகுதி தலைவர்
8. கடையநல்லூர் :மெளலவி ஜாபர் அலி ,உஸ்மானி மாநில செயற்குழு உறுப்பினர்
9. பாளையங்கோட்டை: மெளலவி சாஹுல் ஹமீத் ,உஸ்மானி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்
10. மானா மதுரை (தனி): காசிநாத துரை ,மாவட்ட செயர்குழு உறுப்பினர் புதுக்கோட்டை.
மேலும் இதர தொகுதிகளில் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று தெரிவித்தார். தமிழக மக்கள் SDPI கட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கோண்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: