பொது சிவில் சட்டம் நமது நாட்டிற்கு நல்லது இல்லை: முஸ்லிம் தனி சட்ட வாரியம் கருத்து

image

மூன்று முறை தலாக் கூறும் வழக்கத்தினை ஒழித்து விட்டு பொது சிவில் சட்டத்தினை தேர்வு செய்வது பற்றிய சட்ட கமிசனின்

கேள்வியினை அனைத்திந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் இன்று புறக்கணித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வாரியத்தின் உறுப்பினர் ஒருவர், பொது சிவில் சட்டம் இந்த நாட்டிற்கு நல்லது இல்லை.
இந்த நாட்டில் நிறைய கலாசாரங்கள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.அரசியலமைப்பின்படி இந்த நாட்டில் நாங்கள் ஓர் ஒப்புதலோடு வாழ்ந்து வருகிறோம். அது எங்களது மதத்தினை பின்பற்றி, வாழ அனுமதித்துள்ளது என கூறிய வாரியத்தின் உறுப்பினர், அமெரிக்காவில் ஒவ்வொருவரும் தங்களது தனி சட்டங்கள் மற்றும் அடையாளங்களை பின்பற்றுகின்றனர். இந்த விவகாரத்தில் அவர்கள் தங்களது நடவடிக்கைகளை பின்பற்ற கூடாது என நமது நாடு எப்படி கூற வருகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களும் சம அளவில் பங்கு கொண்டனர். ஆனால் அவர்களின் பங்கு எப்பொழுதும் மறைக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

sponsors:

image

இஸ்லாமிய சமூகவியல் கருத்தரங்கம்

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: