பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவாக குஷ்பு பேட்டி;அது குஷ்புவின் தனிபட்ட கருத்து காங்கிரஸ் விளக்கம்

image

பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பேட்டி அளித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்று சு.திருநாவுக்கரசர் கூறினார்.

இந்திராகாந்தி நினைவு தினம்
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், தேசிய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத் உள்பட நிர்வாகிகள் இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலியும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதையும் செலுத்தினர்.
சு.திருநாவுக்கரசர் தலைமையில் ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்’ உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இந்திரா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு புகழாரம் செலுத்தி சு.திருநாவுக்கசரசர் பேசினார்.
சு.திருநாவுக்கரசர் பேட்டி
அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சு.திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு நீங்கள் எப்போது செல்வீர்கள்?
பதில்:– காங்கிரஸ் கட்சி சார்பில் 3 தொகுதிகளிலும் தேர்தல் பணி மேற்கொள்வதற்கு தலா 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. அமைத்துள்ள தேர்தல் பிரசார குழுவினருடன் இணைந்து செயல்படுவார்கள். நான் 2–வது வாரத்தில் பிரசாரம் செய்வேன்.
கேள்வி:– பணப்பட்டுவாடா புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல்காந்தி வருவாரா?
பதில்:– இடைத்தேர்தலுக்கு பெரிய தலைவர்கள் பிரசாரம் செய்வது இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. எனவே சோனியாகாந்தி, ராகுல்காந்தியை அழைக்கவில்லை.
குஷ்புவின் தனிப்பட்ட கருத்து
கேள்வி:– மத்திய அரசின் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு அந்த சட்டத்துக்கு ஆதரவாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கிறாரே?
பதில்:– காங்கிரஸ் கட்சி பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறது. தொடர்ந்து எதிர்க்கும். சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி பலரும் எதிர்க்கிறார்கள். அந்த சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறோம்.
குஷ்பு ஆதரவு தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அது காங்கிரஸ் கட்சியின் கருத்து இல்லை.
மக்கள் நலக்கூட்டணி நீடிக்காது
கேள்வி:– மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறதே…
பதில்:– இலங்கை தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பிரச்சினை, மொழி போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே ஒத்த கருத்துகள் இல்லை. சமீப காலமாக வெளிவரும் கருத்து வேறுபாடு செய்திகளை பார்க்கும்போது மக்கள் நலக் கூட்டணி ரொம்ப நாள் நீடிக்காது என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நாசே ராஜேஷ், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் எம்.பி.கலீல் ரகுமான்,எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷ்யம், பொதுச்செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: