நெல்லையில் இரண்டு நாள் இலவச உணவு ஹோட்டல் உரிமையாளர் தகவல் சபாஷ்!!

நெல்லை : ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்தால் காசிருந்து, உணவின்றி தவிக்கும் மக்களுக்காக பணம் இல்லாவிட்டால் மக்கள் சாப்பிட்டுச் செல்லலாம் என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நெல்லையில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஸ்ரீபாலாஜி, தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறது. இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, நெல்லையின் முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.
ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுக்களுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய அரசு தடை விதித்தது. இதனையடுத்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் தங்கள் அன்றாட செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பயன்படுத்த முடியாத நிலைய ஏற்பட்டது. மேலும் கடைகள், பெட்ரோல் பங்குகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்கிளலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்படவில்லை. எனவே நடுத்தர, ஏழை மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. சிலர் அத்தியாவசிய தேவையான உணவு சாப்பிட கூட சில்லறை காசின்றி தவித்தனர். ஒருசில இடங்களில் மட்டுமே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன.

இதனையொட்டி, நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகளை வாங்க மறுத்தாலும், பணம் இல்லாவிட்டால் மக்கள் சாப்பிட்டுச் செல்லலாம் என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லையில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஸ்ரீபாலாஜி, தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறது. இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, நெல்லையின் முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இது பற்றி ஹோட்டலின் உரிமையாளர் கோவிந்தன் கூறியதாவது, திடீரென ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன் ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் 500, 1000 ரூபாய்கள் இருந்தபோதிலும் அதனை செலவு செய்ய முடியவில்லை. அதனால் உணவு சப்பிட முடியாமல் சிரமப்படும் தகவல் எனக்கு தெரிய வந்தது.

அதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்தேன். நான் ஹோட்டல் வைத்து இருப்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதனால் இன்றும் நாளையும் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களிடம் ‘பில்’ எதுவும் கேட்க மாட்டோம். அவர்களிடம் பணம் இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் சாப்பிடுவதற்கான தொகையை எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுத்துக் கொள்ளலாம். தராமல் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்துள்ளோம்.பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதே சமயம், இலவசமாக சப்பாடு கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் தான், அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளோம்’’ என்றார். சமூக அக்கறையுடன் செயல்படும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

*
*
*

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: