68 வருடம் கழித்து இன்று சூப்பர் நிலா! ! நீங்க பார்த்தீங்களா??? பார்க்கவில்லையேனில்படம் உள்ளே!!!


​68 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் நிலாவை இன்று மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 70 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் தெரியும். வழக்கத்தைவிட நிலா சுமார் 14 சதவீதம் பெரிதாக நமது கண்களுக்கு தெரியும்.பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ நிகழ்வு ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்பட்டது.இதன் மூலம், அதாவது நிலவை அருகில் இருந்து பார்ப்பது போல தோன்றும். வழக்கமான ஒளியை விட 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இன்று இந்த நிலவு தோன்றும் என்பதால் இன்றைய இரவு மிகவும் வெளிச்சமாக இருக்கும் என்றனர் NASA விண்வெளிக் குழுவினர்.அவ்வகையில் இன்று சூப்பர் நிலாவை கண்டு மக்கள் தங்கள் facebook,twitter பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்

சூப்பர் நிலா தோன்றியவுடன் எடுக்கப்பட்ட படம்


கடந்த 1948ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றியது. அதற்கு பிறகு 68 வருடங்களுக்கு பிறகு இன்று இந்த பெரிய நிலா தோன்றுகிறது. வானம் தெளிவாக இருந்தால் இதை சென்னை உட்பட தமிழகத்தின் எல்லா இடங்களிலில் இருந்தும் மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். அதிக ஒளியுடன் இந்த நிலா தெரியும் என்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தோன்றும்.இன்று பார்க்க முடியாதவர்கள் கூட, அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் பார்த்து ரசிக்கலாம். அல்லது, அடுத்த ஆண்டு டிசம்பரில் பார்க்கலாம்.

Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s