அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் லைவ்;முறைகேட்டில் சிக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

image

சமூகவலைதள பயன்பாட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்கின் சமீபத்திய சாதனையாக உள்ளது LIVE STREAMING.

தற்போதைய மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் இந்த தொழில்நுட்பம் ஒரு சில துறைகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.புகைப்படங்கள் மற்றும் கருத்துப் பதிவுகளுக்கு பிறகு, இன்றைய சமூகவலைதள உலகம் ஃபேஸ்புக்கின் LIVE STREAMINGகின் கீழ் மயங்கிக் கிடக்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டம், சுவாரஸ்ய நிகழ்வுகள், கருத்து பகிர்தல் உட்பட அன்றாட வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் LIVE STREAMINGயில் பதிவு செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர் உலக மக்கள்.சமூகவலைதள உலகின் ஒரு சாதனையாகவே பார்க்கப்படும் LIVE STREAMINGக்கு விரும்பத்தகாத சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது.தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெமோ, காஷ்மோரா, கொடி போன்ற படங்கள் வெளியான நாள் அன்றே திரையரங்கத்திலிருந்து LIVE STREAMING-ல் நேரடியாக ஒளிப்பரப்பட்டன. பைரசி பிரச்சனையால் சிக்கித்தவிக்கும் திரைத்துறைக்கு LIVE STREAMING புதிய வில்லனாக உருவெடுத்துள்ளது.தொடர்பு ஊடகமாக உருவாக்கப்படும் இத்தகைய தொழில்நுட்பங்களின் எதிர்மறை விளைவுகளை தவிர்க்கும் வகையில், நமக்கு ஏற்றார் நாம் தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என சொல்கிறார் காஷ்மோரா பட தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு.சில தினங்களுக்கு முன் வெளியான “அச்சம் என்பது மடமையடா” மற்றும் ஒருசில வேற்று மொழி படங்கள், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலையாக ஒளிப்பரப்பட்டன. இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், பட வெளியீடுக்கு திரையரங்கங்கள் இல்லாத மாற்று வழிமுறைகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனையும் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
LIVE STREAMINGகின் பாதிப்புகளை குறித்து அறிந்த ஃபேஸ்புக் நிறுவனம், முறைகேடான பதிவுகளை தடுக்க சில தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் RIGHTS MANAGER என்ற தொழில்நுட்பம் LIVE STREAMINGயால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.பேஸ்புக்கில் முறைகேடாக படத்தை வெளியிட்டவர்கள் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஒருவரது எழுத்துப் பூர்வமான அல்லது காட்சிப்பதிவு சார்ந்த படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவி உருவாக்குதல் போன்ற செயல்களிலிருந்து பாதுகாக்க 2012ம் ஆண்டு இந்திய அரசு பதிப்புரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது.இந்த சட்டத்தின் கீழ் சிக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை என்பது விதியாக்கப்பட்டது, ஆனால் இந்தியாவில் சட்டவிரோதமாக படைப்புகளை பதிவிறக்கம் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆக்கத்திறன் சார்ந்த படைப்புகளுக்கு மதிப்பு அதிகரித்தும் வரும் இன்றைய சமகாலச் சூழலில்,அவற்றை பாதுகாக்கும் வகையில் வலிமையாக்கப்படவேண்டும் என்பதே திரைத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
*
*
*
Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s