பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்;குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் நடத்தியது

image

இந்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் மற்றும் அனைத்து குவைத் தமிழ் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்

குவைத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் தங்களது தனியார் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர்.

image

ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக நீண்ட காலமாக அடுத்தவர்கள் மூக்கில் கைவைக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த துடித்து வருகிறது. ஏற்கனவே தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்வதறியாது பாஜக அரசு திகைத்து வருகிறது.பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடியின் பாஜக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ரீதியாக உணர்த்துவதற்கும், உலகெங்கும் வாழும் இந்தியர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் குவைத் வாழ் இந்திய மக்களிடம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பினர் கையெழுத்து வாங்கும் பணியை தீவிரமாக செய்தனர். ஃகைத்தான் கே-டிக் (K-Tic) தமிழ் பள்ளிவாசல், குவைத் சிட்டி, மிர்காப், மாலியா, ஃபஹாஹீல், சால்மியா, ஹவல்லி, அப்பாஸியா, அதான், மங்காஃப், ஃபர்வானிய்யா, தோஹா உள்ளிட்ட குவைத் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவரிடமும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தீவிர கையெழுத்து வேட்டையை நடத்தினர்.கையெழுத்திடப்பட்ட ஆயிரக்கணக்கான படிவங்கள் குவைத் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பின் வாயிலாக இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
*
*
*
Sponsors Ad:
image
*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*
image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: