தனது அமைப்பான ஐ.ஆர்.எப் மீது விதிக்கப்பட்ட தடையை சட்டப்படி எதிர்கொள்வேன்; ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்

image

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் அவருக்கு சொந்தமான ஐ.ஆர்.எப்

அமைப்புக்கு (இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ், மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.
மேலும், இதை பயங்கரவாத அமைப்பு என்று கூறிய மத்திய அரசு, ஜாகிர் நாயக்கையும் கைது செய்ய தீவிரம் காட்டியது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கும் அவர், ஐ.ஆர்.எப். மீது விதிக்கப்பட்ட தடை குறித்து நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், 51 வயது ஜாகிர் நாயக் கூறி இருப்பதாவது:-நாட்டுக்கு துரதிருஷ்டவசமானது
ஐ.ஆர்.எப். மீது விசாரணை நடத்துவதற்கு முன்னரே, அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, அதற்கு தடை விதிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இது என்னுடைய மத பிரச்சினையோ அல்லது வேறு சில பிரச்சினையோ என்பது முக்கியம் இல்லை. இப்போது விஷயம் என்னவென்றால், என்னுடைய 25 ஆண்டுகால சட்டதிட்டத்துக்கு உட்பட்ட உழைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கு மிகவும் துரதிருஷ்டவசமான செயல்.
மேலும், ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் தோல்விக்கான எதிர்ப்பை தவிர்க்கவும், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பவும் ஐ.ஆர்.எப். மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது முஸ்லிம்கள், சமாதானம், ஜனநாயகம் மற்றும் நீதி மீது விதிக்கப்பட்ட தடை. அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு இந்த தடையை எதிர்கொள்வேன்.
இவ்வாறு ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: