லால்பேட்டையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்;ஏறாளமானோர் பங்கேற்ப்பு.

image

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரம் என்னும் தலைப்பின் கீழ் மாரத்தான் ஓட்டம் நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி (15-11-2016) முதல் நடைபெற்று வருகிறது.

image

image

அதன் அடிப்படையில் லால்பேட்டையில் நேற்று ஞாயிற்று கிழமை (27-11-2016) மாபெரும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.இதற்க்கு முன்பதிவானது 25-11-2016 முதல் துவங்கிய நிலையில் ஏறாளமான பொதுமக்களும் மாணவர்களும் தமது பெயர்களை முன்பதிவு செய்துக்கொண்டனர்.இந்த ஓட்டமானது காலை 8:00 மணிக்கு கொள்ளுமேட்டில் துவங்கி ஏரிக்கரை ரோடு,சாவடி,காயிதே மில்லத் சாலை , சிதம்பரம்-காட்டுமன்னார் கோயில் சாலை வழியே சென்று லால்பேட்டை கைகாட்டியில் முடிவடைந்தது.மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ள முன்னறே முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்,ஏறாளமானோர் வழிநெடுகிலும் மாரத்தானில் கலந்துக்கொண்டோரை கைதட்டியும்,கூச்சலிட்டும் ஆராவாரப்படுத்தினர்.இப்போட்டியிற்கு பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட செயலாளர் A.பயாஸ் அஹமது மன்பஈ தலைமை தாங்கினாா்,இந்நிகழ்ச்சியின் வாழ்த்துறையை எஸ்.டி.பி.ஐ கடலூர் மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன் மற்றும் டாக்டர்.யூசுப்ஆதம் ஆகியோர் வழங்கினர்.மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து எஸ்.டி.பி.ஐ கடலூர் மாவட்ட செயலாளர் மக்பூல் அஹமது துவக்கி வைத்தார்.மேலும் இப்பேட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஓடினர் மக்களின் மொத்த பங்களிப்பானது 200ஐ எட்டியது.

image

image

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களின் விபரம் பின்வருமாறு:-
முதல் பரிசு:
ரகுராமன்,திருச்சிநாபுரம்
ரூபாய்.3,000 மற்றும் சான்றிதழ்
.
இரண்டாம் பரிசு:
ராஃபிக்,லால்பேட்டை
ரூபாய்.2,000 மற்றும் சான்றிதழ்
.
மூன்றாம் பரிசு:
சரன் ராஜ்
ரூபாய்.1,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும்,5 நபர்களுக்கு ஆறுதல் பரிசும்,10 நபர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

image

image

image
*
*
*
Sponsers Ad:

image

அல்-தர்விய்யா ஹஜ்& உம்ரா சர்வீஸ்,UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s