வீடுகளில் கட்டுவதற்க்கு ரெடிமேட் படிகட்டுக்கள்

image

இன்றைய அவசர யுகத்தின் ‘பாஸ்ட் புட்’ கலாசாரத்தில் வாழ்க்கையின் பல தேவைகள் ‘ரெடிமேடாக’ பூர்த்தி செய்யப்படுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.

அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு புரட்சிகரமான மாற்றங்கள் கட்டுமானத்துறையில் நடந்ததை வல்லுனர்கள் முக்கியமான முன்னேற்றமாக கருதுகிறார்கள். அந்த மாற்றங்கள் மூலமாக கட்டுமான பணிகளை விரைவாகவும், சிக்கனமான செலவிலும் செய்ய முடிகிறது. அத்தகைய தொழில்நுட்பமானது வீடுகள் மற்றும் தொழிற்சாலை போன்ற கட்டமைப்புகளுக்கு பெருமளவில் உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தூண்கள், சுவர்கள், மேல்தளம் போன்ற ‘ரெடிமேடு’ வகைகளில் இப்போது படிக்கட்டுகளும் இணைந்துள்ளது. அத்தகைய ‘ரெடிமேடு’ படிக்கட்டுகள் பற்றிய தகவல்களை அவற்றின் தயாரிப்பாளர்கள் தருவதை இங்கே காணலாம்.படிகளின் பயன்கள்
ஒரு வீட்டின் குறிப்பிட்ட தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்காக பயன்படும் கட்டிட அமைப்பு படிக்கட்டுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல், வீட்டின் தோற்றத்தை அழகாக காண்பிப்பதற்கும் அவை பயன்படுத்தப் படுகின்றன. வீட்டுக்கு நவீனமான தோற்றம் வேண்டும் என்று ஆலோசனை செய்பவர்கள் ‘மிதக்கும் படிக்கட்டுகளை’ தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது படிக்கட்டுகள் தனித்தனியாக சுவரில் வலுவாக அமைக்கப்பட்டு கண்ணாடி அல்லது ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ கைப்பிடிகள் கொண்டு வடிவமைக்கப்படும். கான்கிரீட் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படும் காரணத்தால் தனிப்பட்ட அமைப்பாக இருக்கும் படிக்கட்டுகள் மிதப்பது போன்று தோற்றமளிக்கும்.வகைகள்
படிக்கட்டுகள் அமைப்பதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக வீடுகள் அல்லது அடுக்குமாடிகளில் படிகள் கட்டமைக்கும்போது சரிவான கான்கிரீட் அமைப்பின்மீது படிகள் செங்கல் கொண்டு கட்டப்படும். பிறகு அதன்மீது சிமெண்டு காரை மேற்பூச்சாக பூசப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் உலரவைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். படிக்கட்டுகள் அமைப்பில் இருக்கும் வகைகளாவன :
1. நேராக ஏறக்கூடிய அமைப்பு
2. சுழன்று ஏறக்கூடிய அமைப்பு
3. ‘ப’ வடிவத்தில் படிகள் அமைப்பு
4. அரைவட்ட அமைப்பு
5. ஆங்கில ‘எல்’ வடிவ அமைப்பு
6. ஆங்கில ‘யூ’ வடிவ அமைப்புபுதிய அறிமுகம்
மேற்கண்ட பட்டியலில் சில குறிப்பிட்ட வகைகள் தவிர சில படிக்கட்டு வடிவங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக வழக்கமான முறையிலிருந்து மாற்றம் அடைந்திருக்கின்றன. அனைத்து வகையான மாடிப்படி அமைப்புகளும் கான்கிரீட் கொண்டு அமைப்பதில் உள்ள கால அவகாசத்தை தவிர்க்கக்கூடிய புதிய முறையாகத்தான் ‘ரெடிமேடு’ படிக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலை நாடுகளில் மிகப்பெரிய கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த முறையானது இப்போது நமது நாட்டிலும் அறிமுகமாகியிருக்கிறது. மூலப்பொருட்கள்
கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் படிக்கட்டுகள் தவிர மரங்கள், கண்ணாடி, ‘எம்.எஸ் வகை ஸ்டீல்’, ‘காஸ்டிங் ஸ்டேர்கேஸ்’ அமைப்புகள், அலுமினிய படிக்கட்டுகள் என்று பல்வேறு வகைகள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் அவை சில குறிப்பிட்ட வகை வீடுகளில் உட்புற அமைப்பாகவும், அழகியல் சார்ந்தும் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. மேலும் அவை கான்கிரீட் படிக்கட்டுகள் அமைப்பதை விடவும் கூடுதல் செலவு பிடிக்கும் முறையாக இருப்பதால் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. தற்போது கான்கிரீட் கொண்டு ‘பிரி ஸ்ட்ரெஸ்டு’ முறையில் வீட்டிற்கான படிக்கட்டுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் விரைவாக படிக்கட்டுகள் அமைத்துக்கொள்ள இயலும். பராமரிப்புகள் குறைவு
‘ரெடிமேடு கான்கிரீட்’ படிக்கட்டுகள் சுலபமாக அமைப்பதற்கு வசதியாக இருப்பதோடு பராமரிப்புகளும் குறைவாகத்தான் இருக்கும். காரணம் நமது வீடுகளுக்கு தக்க அளவுகள் கொண்டு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதால் அதன் ‘பினிஷிங்’ மற்றும் கச்சிதமான அளவுகள் மீது தக்க கவனம் செலுத்தி வடிவமைக்கப்படும்.
*
*
*
Sponsers Ad:

image

அல்-தர்விய்யா ஹஜ்& உம்ரா சர்வீஸ்,UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Leave a comment