புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தில் நாளை மாலை முதல் கனமழை

daily_news_9575268030167.jpgசென்னை: 

                   நாளை மாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் காற்று வீசுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்திருந்தது.

 

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவத்தில் இதுவரை 10 சதவீதம் அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதனால், தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது.

அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நாளை மாலை முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடுமையான குளிர்காற்று வீசி வருகிறது. அதனால் பனிப் பொழிவும் அதிகமாக காணப்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: