சோக கடலில் மக்களை மூழ்கடிக்கும் டிசம்பர் மாதம்

பொதுவாகவே டிசம்பர் மாதம் என்றாலே இலையுதிர் காலம் ஆகும் அதன் பிறகே வசந்தகாலம் உருவாகும்.
ஆனால் தமிழகத்தின் இரண்டு தலைவர்களை முதல்வர்களாக இருக்கும் பொழுதே பறித்துக்கொண்டது இந்த டிசம்பர் மாதம் மேலும் சில மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி சுருக்கமாக காண்போம்.
முக்கிய தலைவர்களின் இறப்பு

 • 1987 டிசம்பர் 24-ம் தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவு தமிழகத்தில் இன்றும் அழியா தடயமாகவே ஆயிற்று இன்றளவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாமே காண்கின்றோம்

  • மக்களால் நான் மக்களுக்காவே நான் என்று தமிழ்நாட்டை தன் அன்பால் ஆட்சி செய்துகொண்டிருந்த வீரமிக்க செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் உயிர் பிரிந்தது(டிசம்பர் 5,2016) மீழ முடியாத சோகமே !!!பெண் என்றால் இப்படி கம்பிரமாக இருக்க வேண்டும் என்று வாழ்க்கையை வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர்களின் இடத்தை நிரப்புவது சாத்தியமே இல்லை என்பது உண்மையாகும்!!!!

   இவ்விரு முதல்வர்களும் இறப்பதற்க்கு முன் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

   இயற்கை சீற்றங்கள் !!!

    மறக்க முடியாத சுனாமி( டிசம்பர் 26 ,2004)

                    டிசம்பர் 26 

   தமிழக மக்களால் மறக்க முடியுமா? எத்தனை கதறல்,எவ்வளவு துன்பம் நினைத்து பார்க்க இயலாத உயிர்கள் மண்ணில் புதைந்தன… இன்று கூட அந்த நிகழ்வு நம் மக்களலால் மறக்க முடியாத சோகச் சுவடாகும்.!! ஆழி பேரலை என்கின்ற அந்த சுனாமி இன்றளவும் மக்களை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்த நிகழ்வாகும்.

   கடந்த வருடம் தமிழகத்தை பரட்டி போட்ட வெள்ளம்


   கடந்த வருடம் சென்னை மறுபிறவி எடுத்தது எனவே கூறலாம்
   100 வருடம் இல்லாத மழை கொட்டித்தீர்த்தது காரணம் எல் நினோ
   என்ற புவியியல் மாற்றம்.!!!
   30 அடி கனநீர் திறந்து விடப்பட்டது.இதனால் சென்னையில்  பல்வேறு இடங்களில் நீரும், அடித்து செல்லப்பட்ட குடிசைகளுமாகவே காட்சியளித்தது. 
   சென்ற வருடம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 30அடி கன நீர் திறந்துவிடப்பட்டு சென்னையின் பிரதான பாளங்களாகிய சைதாபேட்டை மற்றும் ஈட்டுத் தாங்கல் பாளங்களே மூழ்கும் அளவு சென்னையை  வெள்ளம் சூழ்ந்தது. சுற்றுபுறம் எங்கும் அடித்து செல்லப்பட்ட குடிசை,கார்,வீட்டுப் பொருட்கள என நீரில் மிதந்து கொண்டிருந்தன.

   அந்த தருணத்தில் அனைத்து தரப்பு மக்களும் போட்களிலும்,பாய்மரங்களிலும் பாதுகாக்கப்பட்டனர்.நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் ; ஆயிரம் கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர்; அந்நேரத்தில் மக்கள் ஒன்று கூடி பணியாற்றியது மனிதாபிமானம் என்ற வார்த்தையை மட்டுமே உணர்த்தியது.

    கடலூரிலும் சென்ற வருட மழை பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

   இறுதியாய் ..,

   டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்

   பாபர் மசூதி இடிப்பு (பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு) 
   டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள

   அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி ) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர


   1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் பாபர்
   மசூதி
   கட்டப்பட்டது.
   பல்வேறு சர்ச்சைகள் குழப்பங்கள் பின்னர் ராமரின் பெயரில் 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.இச்சம்பவம் இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் பேரிடியாக விழுந்தது. மறக்க முடியாத சோகம் ,துயரம் எண்ணற்ற போரட்டாங்கள் பிரச்சாரங்கள் என டிசம்பர் 6 இஸ்லாமியர்களுக்கு கறுப்பு தினமாகவே அமைந்துவிட்டது.

   சென்ற வருடம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த பொழுது எவ்வித பயமுமின்றி மக்களுக்கு சேவை செய்ய இறங்கினர் இஸ்லாமியர்கள்

   டிசம்பர் மாதம்
   பல சோதனைகளை கண்ட தமிழகத்திற்க்கு வருவதெல்லாம் வசந்த காலமாக அமையட்டும்
   -Lalpet Exclusive

   Advertisements

   Leave a Reply

   Fill in your details below or click an icon to log in:

   WordPress.com Logo

   You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

   Google+ photo

   You are commenting using your Google+ account. Log Out /  Change )

   Twitter picture

   You are commenting using your Twitter account. Log Out /  Change )

   Facebook photo

   You are commenting using your Facebook account. Log Out /  Change )

   w

   Connecting to %s

   %d bloggers like this: