மிலாடி நபி மற்றும் இரண்டாம் ஆண்டில் Lalpet Exclusive

மிலாடி நபி 2016:

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் தலைமை காஜி எழுதிய கடிதத்தில், ரபியுல் ஹவ்வல் பிறை நவம்பர் 30ஆம் தேதி தெரிந்ததால் மிலாடி நபி டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி டிசம்பர் 13ஆம் தேதியை மிலாடி நபிக்கு பொது விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதனை பரிசீலனை செய்த அரசு, டிசம்பர் 13ஆம்தேதியை மிலாடி நபி பொது விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி டிசம்பர் 12ஆம் தேதிக்குப் பதில், டிசம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி நபி பொது விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மிலாடி நபி இன்று:

டிசம்பர் 13, 2016 இன்று, 

<!–more–>

மனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில் , அவர்களை

நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர் .

அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்த காலத்தில் , அங்கே

குடிப்பதும் , பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்கள்

நடப்பதுமாக இருந்தது . இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை

சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான்

நபிகள் நாயகம் (ஸல் )

அவர்கள்.

அண்ணலார் நாயகம் (ஸல் ) அவர்கள் கி. பி.570 , ரபியுல் அவ்வல் மாதம் 12 ம்

தேதி மெக்கா நகரில் அவதரித் தார்கள். இவர்களது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் அவர்கள்.

தாய் ஹஜ்ரத் ஆமீனா அவர்கள். நாயகம் அவர்களின் முழுப்பெயர் “ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா

அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘ என்பதாகும் . இவர்கள்

பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் அவர்கள் காலமாகி விட்டார்கள் . தாயார்

ஆமீனா அவர்கள், இவர்கள் பிறந்த 6 ம் ஆண்டில் காலமானார்கள் . எனவே ஹஜ்ரத் அப்துல்

முத்தலிப் என்று அழைக்கப்பட்ட இவர்களது பாட்டனார் , நாயகத்தை வளர்த்து வந்தார்கள் .

பிறகு அவர்களும் காலமாகிவிடவே, சிறியதந்தை ஹஜ்ரத் அபுதாலிப் அவர்களது பராமரிப்பில்

வளர்ந்து வந்தார்கள் .

நபிகள் நாயகம் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும்,

நற்குணத்துடனும் திகழ்ந்தவர்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை “அல்அமீன்’

(நம்பிக்கையாளர் ), என்றும் , “அஸ் ஸாதிக்’ (உண்மையாளர் ) என்றும்

பாராட்டினர்.

23 ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை நபிகளார் திருமணம்

செய்துகொண்டார்கள். 40 ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான்.

நாயகம்(ஸல் ) அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர் . இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள்

பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில்

நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார் , இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத்

தந்தார்கள். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது . பாத்திமா

அம்மையார் அவர்கள் “சுவர்க்கத்து பெண்களின் தலைவி ‘ என

போற்றப்படுகிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக

அறிவிக்கப்பட்டதும், “”நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே . நான் அவனுடைய

தூதனாக இருக்கிறேன் , ” என்று சொன் னார்கள் . இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை

செய்தனர். 53 ம் வயது வரை அவர்கள் கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள்.

இதன்

காரணமாக மெக்காவிலிருந்து 450 கி .மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை

பெருகியது . இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை

ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள்.

நபிகள் நாயகம் மிகுந்த

பணிவுடையவர்கள் . பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள்

இவ்வுலகில் தங்களது 63 ம் வயதுவரை வாழ்ந்தார்கள் . கி. பி.632 , ரபியுல் அவ்வல் மாதம்

12 ம் தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே

நாளில்தான். இந்த நாளையே “மிலாடி நபி ‘ என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

Lalpet Exclusive -ன் இரண்டாம் ஆண்டு:

13,12,2015 சென்ற வருடம் இதே தினத்தில் தொடங்கப்பட்டது தான் லால்பேட்டை எஸ்க்குலுசிவ்(Lalpet Exclusive) என்ற எங்கள் இணையதளம் .

மிலாடி நபி தினமாகிய இந்நாளில் நம் இணையதளம் ஓர் ஆண்டை பூர்த்தி செய்கிறது. இதைவிட என்ன வேண்டும்??

 அதே சமயம் ஓர் ஆண்டு லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மக்கள் தமக்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகவும் பாரட்டப்படகூடிய விஷயம். அல்ஹம்துலில்லா இறைவனுக்கு நன்றி தெரிவித்து ,இறைவன் மேல் பாரத்தை சுமர்த்தி இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறோம்.நமக்கு கிடைக்கும் அனைத்து வெற்றி,பேர்,புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!! 

நன்றி…..

#1YearOfLALPETEXCLUSIVE

-Lalpet Exclusive 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: