லால்பேட்டையில் தஃவா பணிக்குழு நடத்திய தெருமுனை பிரச்சாரம்; ஓர் பார்வை

இஸ்லாமிய தஃவா பணிக்குழு                               (I.D.C) 

லால்பேட்டை இயங்கும் இஸ்லாமிய தஃவா பணிக்குழு சார்பில் 11.12.2016 ஞாயிறு அன்று நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் சிறப்பம்சம் மற்றும் படங்களை காண்போம்.


இஸ்லாமிய தஃவா பணிக்குழு!! முன்பே கூறியது போல தொடர்ந்து பல்வேறு நற்பணிகளை சத்தமே இன்றி செய்து வருகின்றது.
அந்த வகையில் ,

தஃவா வின் அவசியங்கள் என்ற தலைப்பில் மாலை 6 மணியளவில் மக்கள் கூட்டம் நிரந்த காயிதே மில்லத் சாலை(பழைய இந்தியன் வங்கி அருகே) பிரச்சாரம் தொடங்கியது

தஃவாவின் அவசியங்கள் பற்றி பேசிய பொழுது எடுத்தப் படம்

இதில் K.P.M முகமது முஹைதின் சிறப்புரை ஆற்றினார்

இஸ்லாமியனாக பிறந்த எவராகியினும் அவன் அல்லாஹ் அவனுக்கே கட்டுப்பட்டு நடப்பவனாய் இருக்க வேண்டும்.மறுமையில் அவனுக்கு பதில்சொல்ல நம்மை தயார் படுத்தி கொள்வது இறையச்சம் அதாவது இறைவன் மேல் பயம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என தஃவா வின் அவசியங்களை விளக்கினார்.

தஃவா வின் அவசியங்கள் பற்றி பேசிய பொழுது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதை காணலாம்.

இத்தெரு முனை பிரச்சாரம் இரு தலைப்பில் வெவ்வேறு இடங்களில் நடந்தன .முதலாவதாக தஃவா வின் அவசியங்கள் பற்றி மக்களிடம் விளக்கிய பின்னர்,லால்பேட்டை பஸ் ஸ்டான்ட் அருகே பொதுவான தலைப்பாகிய

சமூக சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் சுமார் 7.30 மணியளவில் தொடங்கி 9.00மணியளவில் முடிவடைந்தது.


சமுகத்தில் இன்றும் மாற்றப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் முறையே பேசப்பட்டன.
 

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பிரச்சாரங்களுக்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தமையால் அவர்களுக்கும் தஃவா பணிக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: