லால்பேட்டை கைகாட்டியில் சாலைமறியல்;போக்குவரத்து பாதிப்பு!

மக்கள் சாலையில் அமர்ந்து போக்குவரத்துகளை தடைசெய்த காட்சி! !

லால்பேட்டை:

                          இன்று(15.12.2016) வியாழன்,  

இந்தியன் வங்கியில் கடந்த 15நாட்களாக மக்கள் பணம் எடுக்க முடியாமல் வெறும் கை வீசியே சென்றனர்.மேலும் மருத்துவ செலவு,சொந்த செலவு என பணமெடுக்க வேலைகளை விட்டு மணி கணக்காக வங்கியின் முன் நின்றும் பயன் இல்லை.

எனவே,இனியும் அமைதியாக இருக்க முடியாது என ஆவேமுற்ற மக்கள் இன்று காலை 10 மணியளவில் லால்பேட்டை இந்தியன் வங்கி கிளையை கண்டித்து பெண்கள் சார்பில் மாபெரும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் SDPI, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா த.மு.மு.க, ம.ஜ.க மற்றும் லால்பேட்டை முஸ்லீம் ஜமாஅத்  போன்ற கட்சி மற்றும் இயக்கத்தை சார்ந்த உறுப்பினர்கள்அனைவரும் கலந்து கொண்டனர்.

SDPI மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஷர்ஃபுதீன் மற்றும் தொகுதி செயலாளர் சுலைமான் இருவரும் மக்களை கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவருவதை படத்தில் காணலாம்.!!

பிறகு வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்

முடிவில் லால்பேட்டை இந்தியன் வங்கி நிர்வாகிகள் வரும் நாட்களில் வாடிக்கையாளகளுக்கு ரூபாய் 4000 ஆயிரம் வரை பணம் வழங்குவதாக கூற, பின்னர் காவல்துறை அதிகாரிகள் அனைத்து கட்சி இயக்கத்தின,பொதுமக்கள்  முன்னிலையில் வங்கி நிர்வாகிகள் வாக்கு உறுதி அளித்ததின் பெயரில்  சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலைமறியலை கைவிட்டு பெண்கள்,  பொது மக்கள் கலைந்து சென்றனர்.

கைகாட்டியில் பேருந்துகள் முடக்கப்பட்டதனால் சிதம்பரம் ,காட்டுமன்னார்குடி ,சேத்தியாதோப்பு செல்லும் பயணிகள் 1 மணி நேரம் அவதிப்படனர் என்பது குறிபிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: