லால்பேட்டையில் வளம்வரும் போலி ஃபேஸ்புக் ஐடிக்கள்;சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் பதடிவுகளையும் இடுகின்றனர்;ஜமாஅத் தலையிட கோரிக்கை

image

லால்பேட்டை,16 டிச.21.,
சமிபகாலமாக குறிப்பிட்ட ஒரு போலி முகநூல் கணக்கிலிருந்து ஒரு அமைப்பை சார்ந்த சிலர் மற்றொரு அமைப்பினரை வார்த்தைகளால் மிக கடுமையாக தாக்கும் நோக்கில் அந்த போலி கணக்கில் பல பதிவை இடுகின்றனர்.

அந்த பதிவுகளில் அந்த குறிப்பிட்ட அமைப்பை மட்டுமல்லாது அந்த அமைப்பை சார்ந்தவர்களின் குடும்பத்தாரையும் தரமற்ற சொற்களை கொண்டு மிக கடுமையான முறையில் கொச்சைப்படுத்தியும் அந்த பதிவை இடுகின்றனர்.இதனை நாமும் நம் கண்கூடாக பார்த்த ஒன்றேயாகும்.அதேப்போல் லால்பேட்டைக்கு என்று வெளியில் உள்ள மதிப்பை மிகவும் குறைக்கும் இந்த பதிவுகளை கண்ட லால்பேட்டையை சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இது போன்ற செயல்களை முடக்கும் நோக்கில் தனக்கென ஒரு போலி முகநூல் கணக்கை துவங்கி அவர்களை தடுக்கும் நேக்கில் அவர்களுக்கு எதிரான பதிவுகளை இட்டு அந்த போலி கணக்கை முடக்கும்படி செய்துள்ளார்.பின்னர் தானும் தாம் வந்த வேலை முடிந்ததாய் தமது போலி அக்கவுன்டை டீ-ஆக்டிவேட் செய்து கொண்டார்.அதன் பின் சில நாட்கள் போக மீண்டும் இப்பிரச்சனை தலைவிரிக்க துவங்கியது.மீண்டும் அதே சமூக ஆர்வலர் அதனை எதிர்க்க மீண்டும் ஒரு போலி அக்கவுன்டை துவங்கி அவர்களுக்கு எதிராக செயல்பட்டு மீண்டும் அந்த அக்கவுன்டை டீ-ஆக்டிவேட் ஆகும்படி செய்து மீண்டும் தமது ஐடி யை டீ-அக்டிவேட் செய்கிறார் அவர்.மேலும் சில நாட்கள் கழிந்த பின்பு இப்பிரச்சசை மீண்டும் தலைதூக்க அதனை எதிர்க்க மீண்டும் கலமிரங்கினார் அதே சமூக ஆர்வலர்.தற்பொதைய நிலவரப்படி அந்த அக்கவுன்டையும் எதிர்த்து அந்த பிரச்சனையையும் முடித்து நேற்று இரவு இது போன்ற ஊரின் பேரையும்,நமக்குள்ளாக கலவரங்களையும் தூண்டி ஒற்றுமையை சீர்குளைக்க உருவெடுக்கும் போலி ஐடிகளை வீழ்த்த உதவிய தமது போலி ஐடியையும் முடக்கிக்கொண்டார்.இது குறித்து நாம் அவரிடம் கேட்கையில் இது போன்ற செயல்களை அந்த அமைப்பின் முக்கியச்சர்களும் ஆதரத்து தூண்டி விடுகிறார்கள் என்று கூறினார்.தாம் போலி கணக்கு உருவாக்கிய வேலை முடிவுற்றதாகவும்,இனி இதுபோன்ற செயல்கள்  நடைபெறாமலும்,மற்றவர்கள் முன் நமது ஊரின் பெயர் கலக்கமடையாமல் கம்பீரமாய் நிற்கவும் ஜமாஅதார்கள் அவ்விரு அமைப்பினறையும் அழைத்து பேசி சுமூக படுத்தவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நவீன காலத்தில் ஃபேஸ்புகில் இதுபோன்று இடம்பெறும் பல பதிவுகளை கண்டு ” இவர்களுக்கு இதுதான் வேலை” என்று கூறி விலகிச்செல்வோருக்கு மத்தியில்  அவர்களை இதுபோன்ற செயல்களிலிருந்து தடுக்கவேண்டும்,ஒற்றுமை படுத்தவேண்டும், ஊர் பெயருக்கு கலங்கம் விளைவிக்க விடக்கூடாது என்ற நோக்கில் இதனை எதிர்த்து குறள் கொடுத்த அந்த சமூக ஆர்வலரின் தைரியம் பாராட்டிற்குறியதே ஆகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: