தேர்தலின் போது பிளாஸ்டிக் கொடிகள்,பேனர்கள் பயன்படுத்த தடை; 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவு

image

ஆந்திராவை சேர்ந்த ரவிகிரண் சிங் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் பிளாஸ்டிக் பேனர்கள், கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் அவை குப்பையில் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் தடை விதிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் விதிகளை ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணையின் போது, ரவிகிரண் சிங் வக்கீல் வாதாடுகையில், ‘‘சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில், பிளாஸ்டிக் பேனர்களை விட்டுவிட்டு, பொருட்களை வைக்க தேவைப்படும் சிறிய பிளாஸ்டிக் பைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. பேனர்களுக்கு மாற்று பொருளை பயன்படுத்துவது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளது. ஆனால் பேனர்கள், கொடிகளுக்கு மாற்று பொருள் எளிதாக கிடைக்கும்’’ என்று வாதிட்டனர். இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுவதந்தர் குமார், ‘‘அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார்.
SPONSERS:
*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு


image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: