ரூ.999 க்கு ஜியோ வசதி கொண்ட செல்போன்.. ரிலையன்ஸ் அடுத்த அதிரடி

image

ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த அதிரடியாக 4ஜி இலவச அழைப்பு வசதி கொண்ட சிம்முடன் ரூ.999க்கு புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளது.தொலைத்தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம்

புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போன் அழைப்பு மற்றும் 4 ஜி நெட்வொர்க் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரையும் சுமார் 6 கோடி பேர் ஜியோ இணைப்பை பெற்றுள்ளனர். தினமும் 6 லட்சம்பேர் ஜிேயா இணைப்பை பெற்று வருகிறார்கள். முதலில் டிசம்பர் வரை இலவச சேவை வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தினர் அறிவித்து இருந்தார்கள்.தற்போது மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.
2017 முதல் காலாண்டுக்குள் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிவேக இயங்குதளம் வசதியாக எல்டிஇ(LTE) அல்லது விஓஎல்டிஇ(VoLTE) தொழில்நுட்பத்தில் இந்த செல்போன் செயல்படும். அதோடு இலவச சிம் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் முன்பக்கம் மற்றும் பின்பக்க காமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதோடு ஜியோ சாட், டிவி, வீடியோக்கள் மற்றும் ஜியோ பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய இயங்குதளங்கள்(ஆப்ஸ்) பிரத்யோகமாக இந்த மொபைலில் உள்ளன.
விலை அனைவரும் எளிதாக வாங்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.999 மற்றும் ரூ.1500க்கு விற்பனைக்கு வர உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: