ஆன்ராய்டு ஃபோனில் ஸ்டோரேஜ் சேமிக்க பரிந்துரைக்கப்பட்ட சில ஆப்ஸ்கள்.

image

ஆண்ட்ராய்டு மொபைல்களின் பயன்பாடுகள் அதிகரிக்க ஆரம்பம் ஆனது முதலே அதற்கு தேவையான ஆப்ஸ்களும் வெளிவர தொடங்கிவிட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த ஆப்ஸ்கள் தற்போது மில்லியன் கணக்கில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கூகுளில் கண்டுபிடிக்காத விஷயமே இல்லை என்பது போல அனைத்து விஷயங்களுக்கும் தற்போது ஆப்ஸ் உண்டாகிவிட்டது ஆனா இந்த ஆப்ஸ்களில் எதை நாம் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். பலர் தேவையில்லாத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொண்டு மெமரியை செலவழித்து கொண்டிருப்பார்கள். தேவையில்லாத ஆப்ஸ்கள் காரணமாக மெமரி குறைவதோடு, போனின் ஸ்பீடு குறைவது மட்டுமின்றி ஹேங் ஆவது உள்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.எனவே உண்மையாகவே தேவைகள் உள்ள ஆப்ஸ்களை மட்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். இலவசமாக கிடைக்கின்றது என்பதற்காக கண்டகண்ட ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துவிட்டு தொல்லைப்பட வேண்டாம்.சரி, எது முக்கியமான ஆப்ஸ்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனை, இ-காமர்ஸ், கேம்ஸ் போன்ர ஆப்ஸ்கள் அடிக்கடி பயன்படும் என்பதால் அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் உங்கள் போனை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ள ஆப்ஸ்களையும் கண்டிப்பாக நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கண்டிப்பாக போனுக்கு தேவையான ஆப்ஸ்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

சி கிளீனர் (C Cleaner):

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே இதன் உபயோகம் அனேகமாக தெரிந்திருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் மேக்’களில் உதவுவது போலவே போனிலும் இந்த ஆப்ஸ் தனது சுத்தப்படுத்துதல் வேலையை செய்கிறது.தேவையில்லாத ஆப்ஸ்கள் அல்லது அதிக நாட்கள் நாம் பயன்படுத்தாத ஆப்ஸ்கள் இருந்தால் இந்த சி கிளின்னர் நமக்கு வார்னிங் கொடுக்கும். மேலும் ஜங்க் ஃபைல்ஸ்களை க்ளீன் செய்து மெமரியின் இடத்தை அதிகரிக்கும். ஒரு போன் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் சி க்ளினர் இருக்க வேண்டும்.

க்ளீன் மாஸ்டர் (Cleaner Master):

சி க்ளீனர் போலவே இந்த க்ளீன் மாஸ்டர் ஆப்ஸ், போனை சுத்தப்படுத்த உதவுகிறது. நீங்கள் அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை கண்டுபிடித்து அதை அன் – இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தகவல் கொடுக்கும்.
மேலும் தேவையில்லாத ஆப்ஸ்களின் டேட்டாக்களையும் வெளியேற்றி மெமரி அதிகமாக வைத்திருக்க உதவும். மேலும் நமது மெமரியின் இருப்பு குறித்து அவ்வப்போது நோட்டிபிகேஷன் கொடுக்கும் வேலையையும் இந்த ஆப்ஸ் செய்யும்
மேலும் ஒரு ஸ்மார்ட்போன் நல்ல வேகத்துடன் செயல்படுவதற்கு உதவுவது மட்டுமின்றி வைரஸ் போன்ற மால்வேர் உள்ளே வந்துவிடாமல் இருக்கும் காவலனாகவும் இந்த ஆப்ஸ் இருக்கின்றது.

ஃபிளிக் (Flic):

கேமிரா உள்ள ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அனைவருமே புரபொசனல் கேமிராமேன் ஆகிவிட்டனர். பார்ப்பதை எல்லாம் படம்பிடிப்பது குறிப்பாக செல்பி மோகம் தற்போது அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒருசில புகைப்படங்கள், அல்லது பல புகைப்படங்கள் தேவையில்லாமல் உங்கள் போனில் இருந்து, மெமரியை குறைத்து கொண்டிருந்தால் ,அந்த குறிப்பிட்ட ஒருசில புகைப்படங்களை மட்டும் அழிக்க வேண்டும் என்/றால் உங்களுக்கு உதவுவது இந்த பிளிக் ஆப்ஸ்.இந்த ஆப்ஸ் மூலம் மிக எளிதில் தேவையில்லாத புகைப்படங்களை அழித்தும், தேவையுள்ள புகைப்படங்களை பாதுகாத்து வைக்கவும் உதவும்,. வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வரும்போது இடது புறம் ஸ்வைப் செய்தால், போட்டோ அழிந்துவிடும், வலது புறம் ஸ்வைப் செய்தால் போட்டோ பாதுகாக்கப்படும் பணியை இந்த ஆப்ஸ் செய்கிறது.

போன் க்ளீன் (Phone clean):

இந்த ஆப்ஸ் செய்யும் பணியே வித்தியாசமானது. உங்களுக்கு அவசியம் தேவையுள்ள ஆப்ஸ் ஆக இருந்தாலும் அந்த ஆப்ஸ் டவுன்லோடு செய்யும்போதும், இன்ஸ்டால் செய்யும்போது ஒருசில டெம்பரவரி ஃபைல்ஸ் மற்றும் குக்கீஸ் தேவைப்படும், அதே நேரத்தில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த டெம்பரவரி ஃபைல்கள் தேவைப்படாது.
அதுபோன்ற டெம்பரவரி ஃபைல்ஸ், கிராஷ் லாக்ஸ், ஐடியூன் ரேடியோ கேட்சஸ், ஸ்டோரேஜ் பைல்ஸ், கேமிரா போட்டோ கேட்சஸ் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து அழிக்க உதவுகிறது இந்த போன் க்ளீன் ஆப்ஸ்தான். இதனால் ஏகப்பட்ட மெமரி மிச்சமாகி, போன் நன்றாக இயங்க வழிவகுக்கும்.

கிளின் அப் டூப்ளிகேட் காண்டாக்ட்ஸ் (Cleanup Duplicate Contacts):

நம்முடைய போனில் ஒரே நபரின் போன் எண்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அல்லது போன் நம்பர் ஒன்றாக இருக்கும், பெயர்கள் வேறு வேறாக இருக்கும்.
இதுபோன்ற டூப்ளிகேட் காண்டாக்ட்களை தேடி கண்டுபிடித்து அழிக்க உதவும் ஆப்ஸ்தான் கிளின் அப் டூப்ளிகேட் காண்டாக்ட்ஸ்.இதனால் மெமரி பெரிய அளவில் மிச்சமாகாது என்றால் காண்டாக்ட்டில் உள்ள அட்ரஸ் புக் எளிதாகவும் குழப்பம் இல்லாமலும் இருக்கும்.
sponser Ad:

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர், ஆயங்குடி


*
image

*

image

மாதம் இரு முறை,விலை ரூ.20 மட்டுமே

*

image

விளம்பரம் வைக்க தொடர்பு கொள்ளவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: