ஜியோவை முடியடிக்க ஒன்றினைந்து களம் இறங்கும் ஐடியா மற்றும் வோடஃபோன்..

image

இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பல நாட்களாகச் செய்திகள் வருகிறது.

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும் என்பதால் முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனமும் சரி, புதிதாய் களமிறங்கியுள்ள ஜியோவும் சரி கடுப்பில் இருந்த நிலையில் இச்செய்திகள் உண்மையாகியுள்ளது.இரு நிறுவனங்கள் இணைப்பிற்காக வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளிப்படையாக அறிவித்து வோடபோன் உண்மையை உடைத்தது.இந்த இணைப்பின் மூலம் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வோடபோன் பெற உள்ளது.
வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் மத்தியிலான பேச்சுவராத்தையில், வோடாபோன் இந்தியா (இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இதன் 42 சதவீத முதலீடு இதில் சேர்க்கப்படாது) நிறுவனத்தை முழுமையாக ஐடியா செல்லுலார் பங்குகள் வாயிலாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக வோடபோன் இந்தியா ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளில் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 26.2 சதவீதம் வரை உயர்ந்து 98.15 ரூபாய் வரை இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டது.தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள நிலையில் வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவுகளின் படி 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைவதன் மூலம் டெலிகாம் சந்தையில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் வர்த்தக வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகளவில் குறையவாய்புள்ளது.வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்கும், ஜியோவின் விரைவான வளர்ச்சி மற்றும் ஏர்செல் இணைப்பின் மூலம் ஜியோ கூட்டணி 2வது இடத்தைப் பிடிக்க உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையிவ் 3வது இடத்திற்குச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் இந்திய டெலிகாம் சந்தையில் புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது. வர்த்தக ரீதியாக அனைத்து நிறுவனங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் என்பது உறுதி.
இப்புதிய வர்த்தகப் போட்டியின் காரணமாக டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இனி குறைவான விலையில் மிகச்சிறந்த சேவை கிடைக்கும். இன்றைய நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவில்லை என்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது. இதுவே சிறப்பான சேவை அளிக்க முக்கியக் காரணமாக அமையும்.
sponser Ad:

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர், ஆயங்குடி


*
image

*

image

மாதம் இரு முறை,விலை ரூ.20 மட்டுமே

*

image

விளம்பரம் வைக்க தொடர்பு கொள்ளவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: