உங்கள் குழந்தைக்கு உங்கள் பள்ளியில் இந்த 10 உரிமைகள் கிடைக்கிறதா..?

image

இன்றைய பெற்றோர்கள் தங்களின் முதன்மை கடமையாக நினைப்பது, பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டும் என்பதே.

அதற்காக பல பள்ளிகளைத் தேடி, அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பார்கள். அவர்கள், பள்ளியில் குழந்தைகளுக்கு என்ன விதமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஸ்பீச் குழந்தைகள் உரிமை இயக்கத்தின் திட்ட இயக்குநர் எர்ஸ்கின்.
1. குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். ஒரு போதும் படைப்பாற்றலை தடை செய்யும் விதமான சூழலை ஏற்படுத்தி விடக் கூடாது.
2. குழந்தைகள் தங்களின் கருத்துகளை எவ்வித தயக்கமுமின்றி பேசுவதற்கான சூழல் இருக்க வேண்டும். அவர்களின் கருத்துகளை மிகவும் கவனத்தோடு பொருட்படுத்தி அதற்கேற்ற பதிலை அளிக்க வேண்டியது அவசியம்.
3. கற்றல் என்பது சுமையாக அல்லாமல் சுவையாக அமைய வேண்டும். அதற்கேற்றவாறு கற்றல் முறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. குழந்தைகளின் சிந்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக உற்சாகப் படுத்த வேண்டும். அந்தச் சிந்தனையின் போக்கு குறித்த உரையாடவும் செய்ய வேண்டும்.
5. குழந்தைகளின் பாதுகாப்பு மிக அவசியம். இதில் நான்கு விதமான பாதுகாப்பு வகைகள் உள்ளன.
அ). உடல்: குழந்தைகளின் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளுகாகும் சூழல் ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது.
ஆ). மனம்: உடலைப் போலவே மனதைப் பாதுகாத்தலும் வேண்டும். நிறம், உயரம், எடை, பருமன் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கூறி மனதைச் சோர்வடையச் செய்யும் விதமாக எவரும் நடந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.
இ). இருப்பிடப் பாதுகாப்பு: குழந்தைகள் அமர்ந்து படிக்கும், விளையாடும் திடல் ஆகியவை அரசு விதிகளில் கூறப்பட்டிருக்கும் விதத்தில் பாதுகாப்பு தன்மையோடு இருக்க வேண்டும்.
ஈ). பள்ளியின் இடம்: பள்ளி அமைந்திருக்கும் இடமும் குழந்தையின் உரிமைகளில் ஒன்று. ஏரி, முட்காடு போன்ற குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய இடங்களுக்கு அருகில் பள்ளி அமையக்கூடாது.

  1. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கழிவறைகள் இருக்க வேண்டும். அதோடு, அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும். நீர் வசதி எப்போதும் இருக்கும் விதத்திலும் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு பயன்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்க வேண்டும்.
  2. பெண் குழந்தைகள் படிப்பிலிருந்து பாதியில் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவர்களின் மாத விலக்கு நாட்களில், நாப்கின் பயன்படுத்தவும், பயன்படுத்தியதை எரிக்கவும் வசதி இல்லாததே. அதனால், அது முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  3. விளையாட்டு திடல், நூலகம் ஆகியவை மாணவர்களின் பல்வகைத் திறனை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருப்பவை. எனவே அந்த வசதி இருப்பதுடன், அவை முறையாக பராமரிக்கப்பட்டும் வர வேண்டும்.
  4. ஆசிரியர் – மாணவர் உறவுக்குள் தோழமை உணர்வு இருக்க வேண்டும். மாணவர்களின் முன் ஆசிரியர் நல்லொழுக்கத்திலிருந்து விலகாமல் இருக்க வேண்டும். ஏனெனில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு ரோல் மாடல்.
    SPONSERS AD:
    .
    image
image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

.

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி

.

image

தொடர்புக்கு: +91-8754216506

.

image

மாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: