இந்த நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமாய் போகட்டும்;சர்சையை கிளப்பும் நடிகர் சித்தார்தின் பதிவு

 20 Feb. 2017 11:40


எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை இன்று தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.  எடப்பாடி பழனிச்சாமியை  ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தை கூற முடியாதபடி கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர், இப்போதும் அவர்கள் சசிகலா குடும்பத்தினரின் அதிகாரத்துக்கு உள்பட்டே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எம்எல்ஏக்கள் சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் உள்ளனரா என்பது இன்னும் தெரியாத நிலையில், அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை ஆதரித்துவாக்களித்தால் அது சந்தேகமாகவே பார்க்கப்படும்.
அதற்கு இருந்த குறைந்தபட்ச தீர்வு, ரகசிய வாக்கெடுப்பு.  அதைத்தான் எதிர்க்கட்சி தலைவராக மு. க. ஸ்டாலின் முன்வைத்தார்.

ஆனால், சபாநாயகர் அதனை நிராகரித்தார்.  இது ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிராகரிப்பதாகும். இந்நிலையில் பொறுப்பான எதிர்க்கட்சியாக சட்டசபையை முடக்குவதுதான் திமுக செய்ய வேண்டியது, அதைத்தான்  செய்திருக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் சித்தார்த் ஆவசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.

நாம் இப்போது எண்ணிக் கொண்டிருப்பது இதுதான்.  திமுக-வினர் நன்றாக  நடந்து கொண்டார்கள்.

எதிர்க்கட்சியாக நீங்கள் இந்த விஷயத்தில் மக்களுக்கு கடன்பட்டுள்ளீர்கள். தமிழக சட்டப்பேரவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் கூட கண்டு,கேட்டு அறிந்து கொள்ளட்டும்.  குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள்.

ஜனநாயகத்துக்கு அவமானகரமான நாட்கள்” என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் அவர் தொரிவித்துள்ளனர்.
SPONSERS AD:
.

image

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

.

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி

.

image

தொடர்புக்கு: +91-8754216506

.

image

மாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: