தலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..

image

அரசு காஜிகள் முஸ்லிம் ஜமாத்களில் மூலமாக சரியான முறையில் தலாக் குலா சட்டம் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாமல் தீர்ப்பு வழங்குவதாலே குழப்பங்கள் ஏற்படுகிறது!

image

சொல்லவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி சமுக பொறுப்பில் இருந்து எதிர்ப்பதமாக பயணிக்க கூடிய ஓரு நிகழ்ச்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. ஓரு இஸ்லாமிய ஆண் இரண்டுக்கும் மேற்ப்பட்ட திருமணங்களை இஸ்லாமிய சமுகத்தில் செய்து கொள்ளலாம் அதிலும் ஓரு அளவீடு உண்டு உடலாலும் பொருளாதாரத்தாலும் இருவருக்கும் சீராக நடக்க முடியும் என்ற சூழலில் மட்டுமே அது அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கால சூழலில் இது சாத்தியம் என்றாலும் இக்கால சூழலில் இரண்டு திருமணங்களை நடத்தி கொண்டு வாழ முடியும் என்பது கொஞ்சம் சிரமம் தான். இஸ்லாமியர்கள் இரு திருமணங்கள் செய்துக்கொள்ளலாம் என கோட்பாட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரு சிலர் ஷரியத் சட்டத்தை தவறான முறையில் கையாள்கிறனர் இதற்க்கு ஓரு சில ஜமாத்தார்களும் துணை போகின்றனர். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல இரு தரப்பில் யாரிடம் பண பலம் மோலோங்கி இருக்கிறதோ அவர்களை சார்ந்தே ஜமாத்தார்களின் தீர்ப்பும் அடங்கியுள்ளது. இறை அச்சம் உடையவர்களால் மட்டுமே ஷரியத் சட்டத்தையும் ஜமாத் நிர்வாகத்தை வழி நடத்த தகுதி உள்ளது . யாரோ ஓருவரின் சுயநலனுக்காக எடுக்கப்படும் முடிவு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுகத்தையும் ஆட்டி விக்கிறது இதனால் சமுகத்தின் பார்வையில் இஸ்லாமியர்கள் இப்படி தான் என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கி விடுகிறது. என் வாழ்க்கைக்காக தேடி தேடி சென்று ஓவ்வொரு ஜமாத்திடம் போய் முறையிட்ட போது யாருமே உதவிக்கு வராதாவர்கள் எனக்கு நானே தீர்வை தேடி தொலைகாட்சி நிகழ்வுக்கு சென்ற பின் வருவது வருத்தளிக்கிறது என்ற அந்த சகோதரியின் ஆதங்கதிற்க்கு பதில் என்னிடம் இல்லை ஏன் சமுகத்திடமும் இல்லை …ஜீ டீவி அல்லது அந்த சகோதரியை விமர்சிப்பதால் தீர்வு கிடைத்துவிட போவதில்லை. சரியான தீர்வை நம் சமுகம் அந்த பெண்ணிற்க்கு தரவில்லை என்பதை மட்டுமே மூடி மறைக்கிறோம். ஜமாத்தார்களே ஆலிம் பெருமக்களே சத்தியத்தோடு பயணியுங்கள் நாளை மறுமைக்கான கேள்வி கணக்கில். வெற்றியோடு வாழ முனையுங்கள்

வீடியோ:

SPONSERS AD:
.

image

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

.

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி

.

image

தொடர்புக்கு: +91-8754216506

.

image

மாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: