Tag Archives: அறிவிப்பு

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு யாரும் செல்லக்கூடாது; லால்பேட்டை ஜமாஅத் எச்சரிக்கை.

image

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வரும் 31/01/2016 அன்று திருச்சியில் மாநிலம் தழுவிய மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளது அதற்கான சுவரெட்டிகள், துண்டுபிரசுரங்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவற்றை ஆங்காங்கே வைத்தும் ஒட்டியும் வருகிறது.
இன்நிலையில் லால்பேட்டை ஜமாஅத் இன்று ஜும்ஆ தொழுகையின் போதுஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
” திருச்சியில் வருகிற 31 ஆம் தேதி தவ்ஹித் ஜாமாஅத் சார்பில் நடைபெறவிருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் லால்பேட்டையிலிருந்து ஒருவர் கூட கலந்தகொள்ளக்கூடாது , மீறி கலந்து கொண்டால் அவர்களின் வீட்டு சுபநிகழ்சிகளுக்கோ, பிறநிகழ்சிகளுக்கோ லால்பேட்டை ஜமாஅத் சார்பில் யாரும் கலந்து  கெள்ளமாட்டார்கள் ”  என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-
http://www.lalpet.tk

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்; விதிகளை தளர்த்தியது மத்திய அரசு ்

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

image

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-
http://www.lalpet.tk