லால்பேட்டையில் தொடரும் விபத்துகள்.! பதறும் பெற்றோர்கள்.!தீர்வுதான் என்ன..?

image

தொடரும் விபத்துகள்!
பதறும் பெற்றோர்கள்!

தீர்வுதான் என்ன?

சமீப காலமாக நமது ஊரில் அதிகரித்து வரும் விபத்துகள் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

விபத்தில் சிக்குவோரில் பெரும்பாலோர் இரு சக்கர வாகன ஓட்டிகளே! அதுவும் குறிப்பாக டீன் ஏஜ் இளைஞர்களே!

இனி ஊரில் பைக் இல்லாத இளைஞர்கள் இருக்க வாய்ப்பே இல்லை எனும் அளவுக்கு இளைஞர்களின் கைகளில் பைக்குகள்  உறுமிக் கொண்டிருக்கிறது.
அதுவும் அதிவேகமாக செல்லும் விலையுயர்ந்த பைக்குகள்.

பெற்றோர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு வாழ்ந்த காலம் மலையேறி,
தற்போது கார்பரேட் கம்பெனிகளும்  அதன்  விளம்பரங்களும் தான் இன்றைய இளைஞர்களின் வாழ்வை தீர்மானிக்கிறது.

அவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை குடிக்க வேண்டும்? எப்படி உடை அணிய வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எந்த வாகனத்தை தேர்வு செய்ய வேண்டும்? அதை எப்படி ஓட்ட வேண்டும்? என அனைத்துமே சில அடுக்குமாடிக் கட்டிடங்களின் குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறைகளில் முடிவு செய்யப்படுகிறது.

பைக்கை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அதை மெதுவாக ஓட்டு, கவனமாக போய் வா.
வேகமாக ஓட்டாதே என்றெல்லாம் நாள் கணக்கில் எவ்வளவு நல்வார்த்தைகளைச் சொன்னாலும், கார்பரேட் கம்பெனிகளின் ஒரே ஒரு நிமிடம் பைக் விளம்பரங்களில் காட்டப்படும் சாகசக் காட்சிக்கு முன்னால் பெற்றோர்களின் அந்த வார்த்தைகள் அனைத்தும் பிள்ளைகளிடம் தோற்றுப் போய் விடுகிறது.

ஆசைப்பட்ட பைக்கை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு என்ன செய்வது? என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க்கும் பெற்றோர்கள் பரிதாபத்திற்குறியவர்களே!

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் உலகை விட்டு பிரிவதற்கான ஒரு நேரம் குறிக்கப்பட்டு அதை நோக்கியே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

நேரம் வரும்போது வரத்தானே போகிறது என்ற மனநிலையில் விருப்பம் போல் செயலாற்றுவதும், இது ஆபத்தானது என்ற காரியத்தில் பொடுபோக்காக செயலாற்றுவதும் அறிவுடமையல்ல. மேலும் நாம் ஏற்றுக் கொண்டுள்ள மார்க்கமும்  இப்படிப்பட்ட வாழ்வை அங்கீகரிப்பதில்லை.

“உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்”
        என்று எச்சரிக்கிறது அல்-குர்ஆன்.

***தொடரும் இந்த விபத்துகளுக்கு தீர்வுதான் என்ன?

>>>  நம்மிடத்தில் எவ்வளவு வசதி இருந்தாலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு அதிவேகத்தில் செல்லும் பைக்குகளை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

»» பைக் மட்டுமல்ல எந்த ஒரு பொருளாக இருந்தாலும்,
அவற்றில் சாதக, பாதகங்கள் என்று இரண்டுமே இருக்கும்.
பாதகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் இழப்புகளையும் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

»» விபத்துகள் குறித்த செய்திகள்,
அவற்றின் காரணங்கள்,
அதனால் விளைந்த விளைவுகள் சம்பந்தப்பட்ட ஆவணப் படங்கள் (documentaries) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு அவ்வப்போது எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

»»   தேவையில்லாத நேரங்களில் அவர்கள் பைக்கில் சுற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பைக்கில் செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

முடிந்தால்….
எந்தெந்த விஷயங்களுக்கு அவர்கள் பைக்கை பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும்.

»»  அவசியமானத் தேவைகளுக்காக வள்ளியூர், நாங்குநேரி போன்ற அருகில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல நேர்ந்தால் கூட ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தி கடைபிடிக்க வைக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிக மேலாக…

»» நல்ல உணவு, நல்ல ஆடைகள், நல்ல படிப்பு போன்றவற்றை  அவர்களுக்கு நாம் வழங்கும் விஷயத்தில் காட்டும் அதே அக்கறையை நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் விஷயத்திலும் காட்ட வேண்டும்.

காரணம்  கனிசமாக அளவு விபத்துகளுக்கு காரணம்
போதை போன்ற தவறான பழக்க வழக்கங்களேயாகும்.

“ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குபிள்ளைகளுக்கு வழங்கும் செல்வங்களில் மிகச்சிறந்தது அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தருவது”
         என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

பிள்ளைகளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற சில பெற்றோர்களின் எண்ணங்கள்
எது நல்லது? எது கெட்டது? என்பதை சிந்தனை செய்ய மறந்து விடுவதன் விளைவுகள் அந்தப் பிள்ளைகளை ஆபத்தில் தள்ளிவிடுகிறது.

“உங்கள் செல்வமும், பிள்ளைகளும் உங்களுக்கான சோதனையே”
      என்கிறது அல்-குர்ஆன்.
    

எனவே ஒவ்வொருவரும் தத்தமது கடமைகள், பொறுப்புகளை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றுவதே பாதுகாப்பான வாழ்க்கைக்கு முதல் படி.

இதோ நம் இறைத்தூதர் (ஸல்) சொல்கிறார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே!

உங்களில் ஒவ்வொருவரும் அவரவரின்  பொறுப்புகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.

ஒரு ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளியாவார்.
அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.

ஒரு ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான்.
அவன்  தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள்.
அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்.

ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.

அறிந்து கொள்ளுங்கள்!
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!
உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.”
( நூல்: புகாரீ.)
பொதுநலம் கருதி வெளியிடுவோர்:உங்கள் லால்பேட்டை எக்ஸ்குளுஸிவ் சமூக ஊடகம்.
.
image

image

image

image

image

image

image

image

Leave a comment